districts

சென்னை விரைவு செய்திகள்

சட்டப்பேரவை  பொது கணக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, அக்.13- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   பொதுக் கணக்கு குழு  உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்) ,  பூண்டி கே. கலைவாணன் (திருவாரூர்), ராஜா (சங்கரன்கோவில்), ராஜமுத்து (வீரபாண்டி), துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மருந்தகத்தில் மருத்துவம்:   கடலூரில் 2 பேர் கைது

கடலூர், அக்.13- கடலூர் மாவட்ட மருந்தகத்தில் மருத்துவம் பார்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பு படிக்காமல் மருந்தகங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை மற்றும் மருத்துவ துறையினருக்கு புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து இரண்டு துறையினரும் இணைந்து மாவட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.  இதில், சிதம்பரம் மந்தகரை பகுதியில் மருந்தகத்தில் மருத்துவம் பார்த்ததாக லட்சுமி நாராயணன் மகள் சுதாவை (36) கைது செய்தனர். பண்ருட்டி அருகே சாத்திப்பட்டி மருந்தகத்தில் மருத்துவம் பார்த்த மருந்தக உரிமையாளர் மா.பழனியும் (44) கைது செய்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,  சேத்தியாத்தோப்பு மருந்தக உரிமையாளர் ரா.முருகன், திட்டக்குடி ரா.சண்முக சுந்தரம், இரா.செந்தாமரைக் கன்னி, கருவேப்பிலங் குறிச்சியில் நெ.சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆசியான் ஒப்பந்த எதிர்ப்பு போராட்டம்: தலைவர்கள் மீதான வழக்கு ரத்து

கொச்சி, அக்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிரான 2009ஆம் ஆண்டு ஆசியான் ஒப்பந்த எதிர்ப்பு சாலை மறியல் வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் பிரகாஷ் காரத், பினராயி விஜயன், வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்ட 12 தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆசியான் ஒப்பந்தம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கை எதிர்த்து தலைவர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதி பச்சுகுரியன் தாமஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


 

;