districts

சென்னை விரைவு செய்திகள்

கள்ளகுறிச்சி வன அலுவலகத்தை  முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

கள்ளக்குறிச்சி, மே 17- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 175 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களை  காப்பு காடுகள் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணியார் பாளையம், மேலாத்துக்குழி, கீழாத்துகுழி உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கள்ளக்குறிச்சியிலுள்ள வன நிர்ணய அலுவலகத்திற்கு மனுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். அப்போது, தங்களது பயன்பாட்டிலிருந்து வரும் வன  நிலங்களை அளவீடு செய்து தங்களுக்கு பட்டா வழங்குவதற்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தங்களது அனுபவத்தி லுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.


கல்லூரி மாணவி தற்கொலை

கடலூர், மே 17- கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு காலை  மற்றும் மாலை நேரங்களில் 2 வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து  வருகின்றனர். செவ்வாய்க்கிழமை (மே 17) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். கழிவறைக்கு சென்ற போது அங்கு ஒரு மாணவி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இந்த தகவல் கல்லூரி வளாகத்தில் காட்டுத்தீ போல பரவிய தும் இதுகுறித்து புதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல்  தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த  காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு நடந்த விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள  சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கத்தின் மகள் தனலட்சுமி (19), பி.காம்., முதலாமாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. அதில், “இது போலியான உலகம். நான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயம் இருக்கு” என்று கூறப்பட்டுள்ளது.


சாலை விபத்தில் வாலிபர் பலி

ஆம்பூர், மே 17- ஆம்பூர் வடபுதுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்தவர் திலிப்குமார் (27). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  12 மணியளவில் நண்பர்களு டன் குடியாத்தம் கெங்கை யம்மன் திருவிழாவுக்கு சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். கீழ்முருங்கை நெடுஞ் சாலையில் சென்று கொண்டி ருக்கும் போது, தேசிய நெடு ஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த திலிப்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் திலிப் குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.


பலத்த மழையால் வேரோடு சாய்ந்த 200 ஆண்டு கால ஆலமரம்!

விழுப்புரம், மே 17- விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது கழு பெரும் பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200 ஆண்டு பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வந்தன. இந்த வவ் வால்கள் ஒலிக்கும் சத்தம் காதுகளுக்கு இனிமையாக இருந்து வந்தது. இதனால், தீபாவளிக்குகூட இந்த பகுதி யில் பட்டாசு வெடிப்ப தில்லை.  இந்த நிலையில்,  இடியுடன் கூடிய சூறாவளி காற்றும் பலத்த மழையும் கொட்டியது. காற்றின் கோர பிடிக்கு தாக்குபிடிக்க முடியா மல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது. பின்னர் பொக் லைன் எந்திரம் மூலம் அந்த ஆலமரம் அகற்றப்பட்டது.