districts

சென்னை விரைவு செய்திகள்

ஆயுதப்படை வளாகத்தில்  உடற்பயிற்சி கூடம்

தூத்துக்குடி,மே 25  தூத்துக்குடி ஆயுதப் படை வளாகத்தில்ரூ.2 லட்சம் செலவில் காவலர் களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை எஸ்பி பாலாஜி சரவணன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவ லர்க ளுக்கு தமிழக அரசு வழங்கி யுள்ள ரூ.2 லட்சம் மதிப்  புடைய உடற்பயிற்சி உப கரணங்களைகொண்டு புதிதாக உடற் பயிற்சிக் கூடம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த உடற்  பயிற்சிக் கூடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: மேலும் 2 பேர் கைது

திருவண்ணாமலை, மே 25- வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்த மேலும் 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றது. இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மகேஷ் (43) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு செய்ததாக திருநெல்வேலி மண்டல மேலாளர் கோபிநாத் (45) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கழிவறைகளில் தண்ணீர் இல்லை: ரயிலை நிறுத்திய பயணிகள்

திண்டிவனம், மே 25- மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6ஆவது மற்றும் 7ஆது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும்படி பயணிகள் ஒவ்வொரு ரயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை. இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கும் தண்ணிர் நிரப்பாமல் ரயில் புறப்பட்டது. இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின் மீது ரயில் சென்று கொண்டிருக்கும் போது அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து ரயில் கார்டு, ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் பயணிகளிடம் கேட்ட போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் திண்டிவனம் ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை. விழுப்புரம் ரயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாகக் கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் விழுப்புரம் நோக்கி அரை மணி நேரம் காலதாமதமாகச் சென்றது. ஓடும்ம ரயில்களில் தண்ணீர் உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினைகளை அதிகாரிகள் உடனடியாக  தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


கல்குவாரிகளில் சிறப்பு குழு ஆய்வு

திருநெல்வேலி,மே 25- நெல்லை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளிலும் புதன்கிழமை 2-வது நாளாக சிறப்பு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர் நெல்லை அடை மிதிப்பான்குளம் கல் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் 6 பேர்  சிக்கினர். இதில் 2பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரி ழந்தனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி களிலும் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் செவ்வாய்க்கிழமை ஆய்வு தொடங்கியது. இந்த குவாரிகளை ஆய்வு செய்வதற்காக   6 சிறப்பு குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் புதன்கிழமை 2-வது நாளாக  குவாரி களில் ஆய்வு நடத்தி னர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

;