districts

சென்னை முக்கிய செய்திகள்

ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்

புதுச்சேரி, மே.15- ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் மறைவுக்கு சிபிஎம்  இரங்கல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன்  சனிக்கிழமை (மே 15) காலமானார். அவரது மறைவுக்கு  சிபிஎம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் புதுச்சேரி பிரதேச குழு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடந்த  காலங்களில் தொழிற்சங்க ஒற்றுமையைக்கு துணையாக நின்றவர். தொழிலாளர்களுடைய உரிமைக்கான போராட் டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றியவர். அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக ரவிச்சந்திரன் விளங்கினார். அப்படிப்பட்ட ஒரு தலைவர் மறைவு புதுச்சேரி யில் ஜனநாயக இயக்கங்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சிஐடியு புதுச்சேரி வெள்ளாளர் வீதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர் ரவிச்சந்திரன் உடலுக்கு சிஐடியு புதுச்சேரி  பிரதேச செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மதிவாணன், மனோகர் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும், பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடு? - விசாரணை

கடலூர், மே 15- அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி களுக்கு படுக்கை ஒதுக்குவதில் முறைகேடு நடைபெறுகிறதா  என்று ஊழல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவ மனை, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் அரசு  மருத்துவ மனைகள், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா விற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில், பிராணவாயு வுடன் கூடிய படுக்கைகள் மாவட்டத்தில் 585 மட்டுமே உள்ளது.  தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவோரில் அதிக மானவர்களுக்கு பிராணவாயுவுடன் கூடிய படுக்கை தேவைப்  படுகிறது. இதற்கு அதிகமான தேவை உள்ளதால் அதில் முறை கேடுகள்  நடைபெற்று வருவதாகவும், அரசு  மருத்துவமனை களில் சாதாரண படுக்கை ஒதுக்கீடுக்கும் முறைகேடு நடை பெறுவதாக ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து துணை கண்காணிப்பாளர் மெல்வின்ராஜா சிங்தலைமையில் காவல் துறையினர் கடலூர், விருத்தாச லம், பண்ருட்டி, சிதம்பரம் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை இரவு  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லஞ்சம் கேட்டால் புகார்  தெரிவிக்க வேண்டிய எண்களை முக்கியமான இடங்களில் ஒட்டிச் சென்றனர். அதன்படி, பொதுமக்கள் 04142-233816, 94888 05333 என்ற எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலமானார்

வேலூர், மே 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயற்  குழு உறுப்பினரின் தாயார் கே.சாமிநாதனின் தாயார் சகுந்தலா  அம்மாள் (70) வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன், பேரணாம்பட்டு இடைக்கமிட்டி செயலா ளர் பி.குணசேகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் உள்ளிட்ட பலர் மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

;