districts

img

சிமெண்ட் காரை உதிரும் பள்ளி கட்டடம் ஆபத்தை எதிர் நோக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 126 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளி கட்டிடம்  40 ஆண்டுகள் பழமையானது.  தற்போது, அந்த கட்டடம் சேத மடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பருவ மழையின்போது தொடர் மழையால் வகுப்பறைகள் கட்டத்தின் மேற்கூரை வழியாக  தண்ணீர் ஒழுகியதால்  வகுப்பறை களில் மாணவர்கள் அமரமுடியாத நிலை ஏற்பட்டது. கூரையின் மீது இருந்த ஓடுகள் உடைந்து கீழே விழுந்துள்ளது.  அந்த நேரத்தில் வகுப்புகள் நடக்கவில்லை. இதனால், மாணவர்கள் ஆபத்திலி ருந்து தப்பினர். கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு செய்த அரசு, பள்ளி-கல்லூரி களை திறக்கவும் நேரடியாக வகுப்புகளை நடத்தவும் அனுமதி யளித்தது. இதனையடுத்து, இந்தப் பள்ளியும் திறக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தின மும் பள்ளிக்கு வருகின்றனர். மழையால் சேதமடைந்த பள்ளிக் கட்டி டத்தை சீரமைக்காமல் வகுப்புகள் நடத்தப்படுகிறது.  இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் களிடையே உயிர் பயத்தை அதிகரித்திருக்கிறது.

மேலும், இடநெருக்கடியால் அந்த கிராமத்திலுள்ள இ- சேவை மையத்தில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்க ளுக்கு வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆழ்வார் தலை மையில் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாண வர்களின் பெற்றோர்  பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளை ஆய்வு செய்தனர். அப்போது, வகுப்பறை கட்டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாணவர் ஒருவரின் தாயார் கூறுகையில்,“ புறவழிசாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் புதிதாக கட்டிடம் கட்ட முடி யாது என்று கூறுகிறார்கள். அது வரைக்கும் வேறு இடத்தில் வாடகைக்கு இடம் மாற்ற வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்  குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், “அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்து வரும் நிலையில், தரமான கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசும் கல்வித்துறையும் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.