சென்னை, பிப். 4- பொதுமக்களிடம் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சார்பில் ‘நடைப்பயணம்’ ஞாயிறன்று (பிப்.4) நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற நடைப்பயணத்தில் இந்துஸ்தான் கல்லூரி, ஆசான் மெமோரியல் கல்லூரி, முகமது சதக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 650 மாணவர்கள் மற்றும் கிளெனே கிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவ மனையச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் ‘முன்கூட்டியே புற்றுநோயை கண்டறிந்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும்’, ‘நம்பிக்கையுடன் புற்றுநோயை எதிர்த்துப் போராடுங்கள்’, ‘இன்று விழிப்பு ணர்வு, நாளை சிகிச்சை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்களை பிடித்தபடி நடந்து சென்றனர்.