districts

img

தொற்றுநோய் பரப்பும் குளம் சீரமைக்கப்படுமா?

விழுப்புரம், அக். 15- விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் வண்ணான் குளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காகவும் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது. இந்த குளம் கீழ்பெரும்பாக்கம் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள காகுப்பம், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. காலப்போக்கில் இந்த குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் குளத்திற்குள்ளும் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது குளம் சுருங்கி விட்டது. மேலும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த குளத்தில் கழிவுநீர் கலந்து, தற்போது கழிவுநீர் குளமாகவே மாறிவிட்டது. குளத்தில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குளத்தில் எருமனந்தாங்கல் ஏரிக்கு செல்லும் வடிகால் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;