மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.கோபிநாத்தை ஆதரித்து மத்திகிரியில் பிரச்சாரம் நடைபெற்றது. மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாநகர குழு உறுப்பினர்கள் பி.ஜி.மூர்த்தி, வெண்ணிலா, கிளை செயலாளர்கள் ரவி,புனிதா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் கலந்து கொண்டனர். திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, திமுக மத்திகிரி செயலாளர் முனிராஜ், 44 ஆவது வார்டு உறுப்பினர் மஞ்சு ஆகியோர் பங்கேற்றனர்.