விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெடாரில் இந்தியா கூட்டணியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு சிபிஎம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. காணை ஒன்றியம், கெடார் கடை வீதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர்என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி. முருகன்,காணை ஒன்றியசெயலாளர் பி.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.