districts

img

பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு மோடி அரசு முட்டுக்கட்டை!

சென்னை, பிப். 17 - பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு ஆட்சி யாளர்களின் கொள்கை தடையாக உள்ளது என்று பிஎஸ்என்எல்இயு பொதுச்செயலாளர் பி.அபிமன்யு குற்றச்சாட்டியுள்ளார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை தொலைபேசி மாநில 9வது மாநில மாநாடு திங்களன்று (பிப்.17) மீனம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.அபிமன்யு பேசியதாவது: 4ஜி சேவை வந்த பிறகும் வாய்ஸ் கால் சரியாக பேச முடியவில்லை. பைபர் இணைப்பு பெற்றவர்களுக்கு தரமான சேவை தர முடியவில்லை. இதனால் நுகர்வோர் தனியாரிடம் செல்கின்றனர். பிஎஸ்என்எல் நட்டத்தில் இருப்பதற்கு அரசு மற்றும் நிர்வாகத்தின் தவறான கொள்கைகளே காரணம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையி லேயே ஒன்றிய அரசின் செயல்பாடு கள் உள்ளது. தனியார் நிறுவனம் அராஜகம் ஜியோ நிறுவனம் 25 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தியபோது ஒரு கோடி வாடிக்கையாளர்கள் பிஎஸ்என் எல் இணைப்பை பெற்றனர். மக்கள் பொதுத்துறையை விரும்புகின்றனர். அரசின் செயல்பாடு அதற்கு நேர் எதிராக உள்ளது. பதவி உயர்வு தனியார் நிறுவனங்கள், வெளிநாடு களில் இருந்து நவீன கருவிகளை வாங்க ஒன்றிய அரசு அனுமதிக் கிறது. ஆனால், பிஎஸ்என்எல்  நிறு வனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி தர மறுக்கிறது. பிஎஸ்என்எல் சேவையை திட்டமிட்டு ஒன்றிய அரசு முடக்குகிறது. இதனை முறியடிப் போம். ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம், பயணப்படி உயர்வு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு உள்ளிட்டவை பெற்றேத் தீருவோம். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பாஷா தலைமை தாங்கினார். உதவி மாநிலச் செயலர் எம்.ஜனார்த்தனன் வரவேற்றார். வேலை அறிக்கையை மாநிலச் செயலர் எம்.ஸ்ரீதரசுப்ரமணியனும், வரவு,செலவு அறிக்கையை பொரு ளாளர் எஸ்.ரவியும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பிஎஸ்என்எல் சென்னை மற்றும் தமிழ்மாநில தலைமை பொதுமேலாளர் எஸ்.பார்த்தீபன், மனிதவள அதிகாரி பாஸ்கரன் உள்ளிட்ட தோழமைச்சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். உதவிச்செயலர் கே.லஷ்மணன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு 21 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக எஸ்.பாஷா, செயலராக எம்.ஸ்ரீதர சுப்ரமணியன், பொருளாளராக இ.ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.