கிருஷ்ணகிரி,அக்.8- ஓசூர் அருகே கர்நாடக எல்லை யான அத்திப் பள்ளியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி யானோர் எண்ணிக்கை 14 உயர்ந்துள் ளது. தமிழ்நாடு எல்லையை ஒட்டி கர்நாடக எல்லையில் உள்ளது அத்திப் பள்ளி சுங்கச்சாவடி. அதன் அருகில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் கர்நாடகாவில் கட்டுப்பாட்டுக்குள் வரக் கூடியவை களாகும். தீபாவளி பண்டிகை காலங்களில் இங்கு அதிகமாக பட்டாசு கடைகள் திறக்கப்படுவது வழக்கம். குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று (அக்.7) அத்திப் பள்ளியில் உள்ள ஒரு குடோனில் 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அட்டை பெட்டிகளில் வந்து இறங்கின. அப்போது மின் கம்பத்தில் உரசியதில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல்அறிந்து பத்துக்கும் மேற்பட்ட கர்நாடக தீயணைப்பு வண்டிகள் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தன. ஆனால் குடோன், பட்டாசுகள் கொண்டு வந்த கனரக வாகனம் மற்றும் அருகில் இருந்த இரண்டு டெம்போக்கள், பத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் உடல் கருகி இறந்தவர்கள் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை யில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு கடை நவீன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் இறந்தவர்களில் 8 பேர் தரும புரி மாவட்டம், அம்மாபேட்டை சேர்ந்த வர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதில் 8 பேர் கல்லூரி மாணவர்கள்,3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. தீ விபத்து தொடர்பாக கடை உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், பட்டாசு கடை வெடி விபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகளையும் அமைத்துள்ளனர். ரூ.25 லட்சம் நிவாரணம்: சிபிஎம் இந்த வெடி விபத்தில் பலியான வர்கள் தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக, கல்லூரி விடுமுறையில் 600 ரூபாய் கூலிக்காக வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர் களும் பலியாகியுள்ளனர். இந்த தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் மாநகர செயலாளர் சி.பி. ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி,முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்டத் துணைத் தலைவர் சீனி வாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த வெடி விபத்தில் பலியான தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருக்கும் இரு மாநில அரசும் தலா ரூ. 25 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.