districts

கட்சி அலுவலகம் கட்ட உண்டியல் காசு !

ராணிப்பேட்டை, அக்.9 -   ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர் ம.கோவலன் மகள் மணிமேகலை (வயது7)  வீட்டில் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 319ரூபாயை  கட்சியின் மாநில குழு அலுவலக கட்டிடம் கட்ட தனது பங்காக மாநில குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். இராணிப்பேட்டை மாவட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக உள்ள ம. கோவலன். அவருடைய மனைவி மஞ்சுளா கலவை கூட்டு ரோடு பகுதியில் சிறு கடை நடத்தி வருகின்றனர். அவர்கள் சிபிஎம் அலுவலகம் கட்ட நன்கொடையாக   ரூ.500 கொடுத்துள்ளார். அதனை கவனித்த குழந்தை மணிமேகலை தன் உண்டியலில் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 319 பணத்தை கொடுத்தார். உடன் கட்சியின் அமைப்பாளர்  என். காசிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரகுபதி, டி சந்திரன் தாலுகா செயலாளர்கள் எஸ். கிட்டு, செல்வம்  உள்ளிட்டோர் இந்த நிதி வசூலில் பங்கேற்றனர்.