சென்னை, மே 24 - பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.3405 கோடி நிகர லாபம் ஈட்டி யுள்ளது. கடந்த நிதியாண்டை விட நிகரலாபம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா ஆரோக்கியமான வளர்ச்சிi எட்டியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. வங்கியின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டின் நிகரலாபம் 142 சதவிகிதம் அதிகரித்து ரூ. 606 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு இதே கால கட்டத்தில் ரூ.250 கோடியாக இருந்தது. வாரக்கடன் விகிதம் 2.34 விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்ததாண்டு மார்ச் மாதம் 3.35 விழுக்காடாக இருந்தது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் அதானு குமார் தாஸ் கூறினார்.. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு 2021-22 ஆம் ஆண்டிற்கான ஈக்விட்டி பங்கிற்கு (ரூ. 10 முகமதிப்பு) 2 ரூபாய் ஈவுத்தொகையை வாரியம் பரிந்துரைத்தது. பிஎஸ்இயில் வங்கியின் பங்கு 2.48 சதவீதம் உயர்ந்து ரூ.47.6 விழுக்காடாக இருந்தது என்று வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.