districts

img

குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சென்னை, செப். 8- குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் எஸ்ஆர்எம் பிஸியோதெரபி கல்லூரி மாணவர்கள் 480 கி.மீ தொடர் ஓட்டமாக காட்டாங் குளத்தூர் எஸ்ஆர்எம் வளாகம் அடைந்தனர். உலக பிசியோதெரபி தினம்  முன்னிட்டு செப்6 காலை ஆந்திரா மாநிலம் அமரா வதி எஸ்ஆர்எம் வளாகத் திலிருந்து 70 மாணவர்கள் ஒலிம்பிக் சுடருடன் தொடர்  ஓட்டமாக புறப்பட்டனர். பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.எஸ்.ராவ் ஒலிம்பிக் சுடரினை ஏற்றி அதனை மாண வர்களிடம் வழங்கினார். அதனை மாணவர்கள் தொடர் ஓட்டமாக செங்கல் பட்டு மாவட்டம் பொத்தேரி யில் உள்ள எஸ்ஆர்எம் வளாகத்திற்கு வந்தடைந்த னர்.  அவர்களை தமிழ்நாடு  மற்றும் கேரளா மாநிலங்க ளுக்கான யுனெஸ்கோ நிறுவனத்தின் குழந்தைகள் பாதுகாப்பு சமூக திட்ட சிறப்பு அலுவலர் ஜி. குமரே சன் பாராட்டினார். இந்தநிகழ்ச்சியில் இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக் குமார், முனைவர் எஸ். பொன்னுசாமி, கூடு தல் பதிவாளர் முனைவர் டி. மைதிலி, எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஏ. சுந்தரம் ஆகி யோர் பங்கேற்றனர்,நி றைவாக பொறுப்பு டீன் பேராசிரியர் டி. எஸ். வீரகௌ தமன் நன்றி கூறினார்.

;