districts

கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, செப்.6 - கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மெரினா, பெசன்ட் நகர் மற்றும்  திருவான்மியூர் கடற்கரை பகுதிக ளில் மக்கள் பெருமளவு குவிகின்ற னர். இந்தப் பகுதிகளில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதை தடுக்க, ஆக.5 முதல் சுகாதார அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது காலை, மாலை வேளை களில் ஆய்வு செய்து, தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கிறது. இதன் தொடர்ச்சியாக, மெரினா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதை தடுக்க மண்டல அலுவலர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. 16 பேரை கொண்ட இந்தக்குழு தினசரி மாலை 4 மணி முதல் இரவு  12 மணி வரை கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்ற னர். இதன்படி ஆக.17 முதல் செப்.2 வரை மெரினா கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்திய கடை உரிமை யாளர்களுக்கு 31 ஆயிரம் ரூபாய்  அபராதமும், பெசன்ட் நகர் கடற்கரை யில் 12 ஆயிரத்து 300 ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மக்கள், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா கடற்கரையை உருவாக்க வேண்டும் என்று சென்னை  மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

;