மறைமலைநகர், ஜன. 12- பணியிலிருந்த மின் ஊழி யரை தாக்கியவரை உடனடி யாக கைது செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மின் பிரிவு அலுவ லகத்தில் கணக்கீட்டு அலுவ லராக முத்துராமன் என்பவர் பணி செய்து வருகிறார். இவர் கடந்த சனியன்று (ஜன 8) கோவளம் அடுத்த பேரூர் பிள்ளையார் கோவில் தெருவில் லோகமுத்து என்பவர் வீட்டில் கணக்கீடு பணி செய்யும்போது லோகமுத்து மின் கட்ட ணத்தை குறைவாக பதிவு செய்திடுமாறு வலியுறுத்தி யுள்ளார். இதற்கு மின் கணக்கீட்டு அலுவலர் முத்துராமன் தாக்கப்பட்டார். லோகமுத்து மற்றும் அவரது உறவினர்களால் தாக்கப்பட்ட முத்துராமன் தற்போது செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத் தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் கால தாமதம் செய்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்த மின் கணக்கீட்டு அலுவ லர் முத்துராமனை தாக்கிய வர்களை கைது செய்திட வலி யுறுத்தி செவ்வாயன்று மின்வாரிய ஊழியர்கள் கோவளம் பகுதியல் பணி புறக்கணிப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளி களை கைது செய்யாத காவல்துறையை கண்டித் தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய உயர் அலுவலர்களை கண்டித்தும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மறைமலை நகர் செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று (ஜன.12) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொறியா ளர் அமைப்பின் நிர்வாகி மயில்வாகனன், கணக்காயர் கள தொழிலாளர்கள் அமைப்பின் நிர்வாகி பெரியசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மறை மலைநகர் கோட்டத் தலைவர் மனோகரன், செயலாளர் தேவக்குமார், எம்ப்ளாயீஸ் பெடரேசன் நிர்வாகி கார்த்திக், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சகாயம் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் எ.முருகானந்தம் பேசினார்.