districts

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

சென்னை, பிப்.27- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எம்.ஜி.எம். மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்துகிறது. இலவச மருத்துவ முகாமில் உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த அழுத்தம், வெப்ப நிலை, பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். வருகிற மார்ச் மாதத்தில் 14 நாட்கள் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. வருகிற 1-ந் தேதி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திலும், 3-ந் தேதி கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலும், 5-ந் தேதி ஆலந்தூரிலும், 7-ந் தேதி சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலும், 9-ந் தேதி விம்கோ நகரிலும் முகாம் நடக்கிறது. 11-ந் தேதி காலடிப் பேட்டையிலும், 15-ந் தேதி புதுவண்ணாரப் பேட்டையிலும், 17-ந் தேதி தண்டையார் பேட்டையிலும், 19-ந் தேதி வண்ணாரப் பேட்டையிலும், 21-ந் தேதி சென்ட்ரலிலும், 23-ந் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திலும், 25-ந் தேதி எல்.ஐ.சி. மெட்ரோ நிலையத்திலும், 29-ந் தேதி ஆயிரம் விளக்கிலும், 31-ந் தேதி ஏ.ஜி.பி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திலும் முகாம நடைபெற உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாமில் உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த அழுத்தம், வெப்ப நிலை, பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்தி பயனடையலாம் என்று மெட்ரோ ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.