சென்னை,மார்ச் 29- சென்னையில் உள்ள தென்னக காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6 லட்சம் காசோலைகள் 2 நாட்களில் பரிவர்த்தனை ஆகாமல் தேங்கியுள்ளன. சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு ஊழி யர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி ஊழியர்க ளும் முழுமையாக கலந்து கொண்டதால் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன. இதனால் சென்னையில் இயங்கும் தென்னக காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6 லட்சம் காசோலைகள் 2 நாட்களில் பரிவர்த்தனை ஆகாமல் கிளைகளில் தேங்கி யுள்ளன. அகில இந்திய அளவில் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள் இதே போன்று முடங்கி உள்ளன. அதே போல கடன் பட்டு வாடா, கடன் வசூலிப்பு போன்ற வங்கி வேலைகளும் முழுமையாக நடைபெற வில்லை என்று தொழிற் சங்கத் தலைவர்கள் தெரி வித்தனர்.