districts

img

திருக்கழுக்குன்றத்தில் கலைஞர் விழா

மாமல்லபுரம்,ஜூன் 29-

     முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவின்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் சிறப்பு  கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது.

     முகாமில் மாடுகளுக்கு செயற்கை கருகூட்டல், கருபிடிப்பை மைக்ரோ கேமரா மூலம் கம்ப்யூட்டர் வழியாக பார்த்து அதற் கேற்ப மருந்து கொடுத்தல், குடற்புழு நீக்கம், புரதச்சத்து மருந்து கொடுத்தல், நாய்க ளுக்கு தடுப்பூசி போடு தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் முகாமில் செய்யப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர் களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.