districts

ஏப்.9 சென்னை மாநகராட்சி பட்ஜெட்

சென்னை, ஏப். 5 - சென்னை மாநகராட்சி யின் 2022-2023 நிதியாண்டி ற்கான நிதிநிலை அறிக்கை 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஏப்.9) ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் முதல் பெண்  தலித் மேயராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள ஆர். பிரியா, இந்தக் கூட்டத்தில் காலை  10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக் கிறார்.  இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதன்பின் நிதிநிலை அறிக்கைக்கு மன்றத்தின் ஒப்புதல் பெறப்படும்.