விழுப்புரம், ஜூன் 22- வீரதீர பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்காலம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு:- 2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது, வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை- 600 003 என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் வருகிற 30 ஆம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருது தொடர்பான இதர விவரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 74017 03485 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.