districts

img

காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்

சென்னை, ஆக. 28 - செவிலியர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு பகுதி சுகாதார செவிலியர் மற்றும் மாநகர சுகாதார செவிலியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை யுவின் செயலியில் பதிவேற்ற டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டரை நியமிக்க வேண்டும்,  கோவிட் பணிக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். வேலை நேரத்தை காலை 8 மணி முதல்  மாலை 3 மணி வரை என வரையறுப்ப தோடு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று (ஆக.28) ரிப்பன் மாளிகை வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெ.சரஸ்வதி தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.திருமகள், பொருளாளர் சி.சித்ரா, தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை மருந்தாளுநர் சங்கத் தலைவர் வே.விஜயகுமரன், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சீனி வாசுலு உள்ளிட்டு தோழமை சங்கத் தலை வர்கள் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலத்  தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றி னார்.