சென்னை,ஏப்.5- ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலை யில் அப்பல்லோ மருத்துவர்கள் செந்தில் குமார், தவபழனி ஆகிய 2 மருத்துவர்களும் செவ்வாயன்று(ஏப்.5) ஆறுமுக சாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்படுகிறது.