districts

img

உழைக்கும் மக்களுக்கு நகருக்குள்ளேயே அடுக்குமாடி குடியிருப்பு கே.பி.பார்க் பாராட்டுக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 15 - சென்னையில்  நீர்வழிகரையோரம் உள்பட  பல்வேறு பகுதிகளில் இருந்து குடிசை பகுதி மக்களுக்கு சென்னை நகருக்குள்,  அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். தீவுத்திடல் அருகே கால்வாய் கரையோரம்  இருந்த சத்தியவாணி முத்து நகர் குடியிருப்பு களை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக அரசு அகற்றியது. இதனை தடுக்கச் சென்ற சிபிஎம் தலைவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அதன்பின்பு கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் அந்த பகுதியை பார்வையிட்டு, குடியி ருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இவற்றையெல்லாம் மீறி அரசு நிர்வாகம்  குடியிருப்புகளை அகற்றியது. பெரும்பாக்கத் தில் மாற்று குடியிருப்பு வழங்கியது. இதனை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சி,  அருகாமையில் உள்ள கே.பி.பார்க் அடுக்குமாடி  குடியிருப்பில் வீடு வழங்க வலியுறுத்தியது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையேற்று சுமார்  130 குடும்பங்கள் வெளியேறாமல் அதே இடத்தில் பேனர்களை கூரையாக்கி போராட்டத்தை தொடர்ந்தனர். மறுபுறம் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை, மனு அளித்தல்,  அமைச்சர், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை என தொடர் போராட்டங்களை தொய்வின்றி நடத்தியது. இதற்கிடையில், ஒரு சில அமைப்புகள்  மக்களை மார்க்சிஸ்ட் கட்சி திசை திருப்புவ தாக கூறி அவதூறு சுவரொட்டிகளை அச்சடித்து  ஒட்டி, போராட்டத்தை சீர்குலைக்க முயற்சித்த னர். இவற்றையெல்லாம் கடந்து 2 வருடமாக நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றது. 178  குடும்பங்களுக்கு தமிழக அரசு கே.பி.பார்க்  அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்தது.

அன்பான வரவேற்பு
கே.பி.பார்க்கில் குடியியேறிய மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க புதனன்று (ஜூன் 15)  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கே.பி.பார்க் வந்தார். அவரை பறை இசைத்து, மலர்த்தூவி, ஆரத்தி  எடுத்து, துண்டு அணிவித்து ஆனந்த கண்ணீ ரோடு மக்கள் வரவேற்றனர். அதன்பின்னர் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, வீடுகளை சென்று பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். பாராட்டுவிழா கூட்டத்தில் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: கே.பி.பார்க்கில் வீடுகளை பெற்றுள்ள மக்கள் மறுபிறவி எடுத்ததை போல் உணர் கிறார்கள். ஏழை எளிய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செயல்களை அரசு செய்ய வேண்டும். புல்டோசர்களை கொண்டு குடியிருப்பு களை இடிக்கக்கூடாது.

சென்னை ரேஸ்கோர்ஸ், மடம், அறக்கட்டளைகள், நிறுவன  இடங்களை கையகப்படுத்தி எளிய மக்களுக்கு  வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலை நாடுகளில் உள்ளதுபோல் ஒரு குடும்பத்திற்கு 2 வீடுகளுக்கு மேல் கிடையாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சென்னை நகர மக்களை சென்னை நகருக்கு வெளியே கொண்டு சென்று குடியமர்த்த  வந்த நிலையில், நீண்டகாலத்திற்கு பிறகு சென்னைக்குள், குடியிருந்த பகுதிக்கு அருகாமையில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வைத்துள்ளோம். கே.பி.பார்க்கில் ஏற்கெனவே இருந்த வீடுகளை புதுப்பித்தும், ஒதுக்கீடு செய் யாத நிலையில், கட்டணமின்றி அதை பெற்றுக்  கொடுத்தோம். சத்தியவாணி முத்துநகர் மக்களுக்காக கே.பி.பார்க் குடியிருப்பை ஒதுக்க கோரியபோது, சிலர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினர்; புரோக்கர்களாக செயல்பட்டனர். மக்கள் நலனுக்கு எதிராக நின்றனர். அதையெல்லாம் மீறி மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது. வீடுகளை ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வாரிய இயக்குநர் கோவிந்தராவ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. காவல்துறையை நம்பி ஆட்சி செய்தால் அரசு மக்கள் நம்பிக்கையை இழக்கும். அதி காரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தி னால் அது எதிர்விளைவுகளை உருவாக்கும். எனவே, உழைக்கும் மக்களுக்கு நகருக்குள் ளேயே, அருகாமையிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மக்களே நிரந்தரமானவர்கள்
மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் குறிப்பிடு கையில், “அரசு குடிசைப்பகுதி மக்களை குப்பையாக கருதி, ஊருக்கு வெளியே கொண்டு  சென்று கொட்டுகிறார்கள். சென்னையை அழகுறச் செய்த உழைக்கும் மக்களுக்கு நகருக் குள் வாழ உரிமையில்லையா? அரசு தற்காலிகமா னது. மக்கள் நிரந்தரமானவர்கள். இதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஊக்கம் தரும் வெற்றி
மத்தியசென்னை மாவட்டச் செயலாளர்  ஜி.செல்வா குறிப்பிடுகையில், “குடியிருப்பு களை அகற்ற புல்டோசர் வந்தபோது அதை  தடுத்து நிறுத்த வழிகாட்டிய கே.பாலகிருஷ்ணன், போராட்ட வெற்றி விழா கூட்டத்திற்கும் வந்து சிறப்பித்துள்ளார். இந்த போராட்ட வெற்றி அடுத்தடுத்த போராட்டங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்துள்ளது. அவதூறுகளுக்கு மத்தியில் அயராது போராடி சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.  கே.பி.பார்க் கிளைச் செயலாளர் சித்தார்த்தன்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பகுதிச் செயலாளர்கள் கே.முருகன் (எழும்பூர்), ஜலாலுதீன் (துறைமுகம்), மாவட்டக்குழு உறுப்பினர் குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் மற்றும் கோவிந்த சாமி, சிந்துஜா உள்ளிட்டோர் பேசினர்.

;