districts

img

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ரத்த தானம் முகாம்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ரத்த தானம் முகாம் கே.பி.பார்க்கில் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தினர் நடத்திய இந்த முகாமில் குருதி கொடையாளர்களுக்கு பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிங்கார வடிவேலு சான்றிதழ்களை வழங்கினார். சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சித்தாந்தன், மாநில குழு உறுப்பினர் நந்தினி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ. பிரியதர்ஷினி எம்.சி., செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், எழும்பூர் பகுதி தலைவர் ஹேமந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.