districts

img

அம்பேத்கர் இரவு பாட சாலை இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை, மே 19 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தி வந்த இரவு பாடசாலை இடிக் கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தியாகராயநகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 131 வது வட்டம், நல்லாங்குப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய காலத்திலேயே அங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டாக்டர் அம்பேத்கர் இரவு  பாட சாலை அமைத்தனர். அங்குள்ள குழந்தைகளுக்கு தினசரி அர்ப்பணிப்போடு கல்வி கற்று கொடுத்து வந்த னர். இந்நிலையில் செவ்வா யன்று (மே 17) இரவு பாடசாலையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமும் இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. வாரிய  குடியிருப்பை சுற்றி ஆளும்  கட்சியினரும், எதிர்க்கட்சியி னரும் சொந்த தேவைக்காக  ஆக்கிரமித்து வைத்துள்ள னர். ஒருசிலர் இடத்தை ஆக்கிரமித்து கடைகளை கட்டி வாடகை விட்டுள்ள னர். இதனை அனுமதிக்கும் அதிகாரிகள், இரவு பாட சாலையை இடித்துள்ளனர். குடியிருப்புகளுக்கு எவ்வித இடையூறுமின்றி படிப்பகம் அமைந்துள்ளது. சமூகவிரோத செயல்கள் நிகழாமல் தடுத்து வருவ தோடு, குழந்தைகளுக்கு கட்டணமின்றி பாடங்களை யும், சமூக நெறிகளையும் கற்றுக் கொடுத்து வந்தது. இந்த நிலையில் படிப் பகத்தை மட்டும் குறி வைத்து இடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, வாரியத்தின் செயல் வன்மையாக கண்டிக் கத்தக்கது. இரவு பாட சாலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலா ளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

;