லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்,குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணி துவங்கியிருக் கிறது.1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 47 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணை விரைந்து நடத்தி, தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தர விட்டது.அதனடிப்படையில், அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணைக்குப் பின்,குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும் பணியை லக்னோ சிபிஐ நீதிமன்றம் துவங்கி இருக்கிறது.சிஆர்பிசி பிரிவு 313 இன் கீழ், நீதிபதி தனது விசாரணையின் போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர் களிடம் கேள்வி எழுப்பி, அவர்கள் தரப்பு விளக்கங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்க அனுமதி வழங்க வேண்டும். அந்த நடைமுறைகளே தற்போது துவங்கி இருக்கின்றன.இதன்படி பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அடுத்தடுத்த நாட்களில்பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி, பிரிஜ் பூஷன், சரண் சிங் மற்றும் சாக்சி மகராஜ் உள்ளிட்டோரும் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்