districts

img

பொன்னேரியில் பழைய மாணவர்கள் சங்கமம்

பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1985-87 ஆம் கல்வியாண்டில் படித்த பழைய அறிவியல் பிரிவு மாணவர்கள் ஒன்று சேரும் சங்கமம் விழா ஞாயிறன்று (பிப்.11) நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் கே.மோகன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விஜயராகவன், பிரபாகர், ஒ.ராமச்சந்திரன், பாலம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசுவதற்கான தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது.