சென்னை,டிச.4- விமான நிலையம் முதல் விம்கோ வரை இயக்கப்படும்மெட்ரோ ரயில் போக்கு வரத்தை எண்ணூர் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. சென்னை மாவட்ட 6ஆவது மாவட்ட பேரவை மாவட்ட தலைவர் பி.ஏபெல் தலை மையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ம.நாதன் தொடங்கி வைத்தார். செயலாளர் என்.ராமசாமி வேலை அறிக்கையை சமர்பித்தார். தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் மேனாள் இணை இயக்குநர் மருத்துவர் கே.காந்தராஜ் வாழ்த்திப் பேசினார். ஓய்வூதியர் இதழ் சந்தா சேர்ப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த நங்கநல்லூர், சைதை-கிண்டி, பெரம்பூர் கிளைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்,அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆர்.ஜோதி, அப்பர் ஆகியோர் பேசினர். ஓய்வூதியர் குடும்ப நிதியை ரூ 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும், மூத்தகுடி களுக்கு தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், 3 விழுக்காடு அகவிலைப் படியை முன்தேதியிட்டு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்கூதியம் ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.