districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் சைதாப்பேட்டை பகுதி, கோட்டூர்புரம் கிளை சார்பில் மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும்  குடியரசு தின நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஜன.26) நடைபெற்றது. மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் கவிதா தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் தீ.சந்துரு (வாலிபர் சங்கம்),  ம.சித்திரகலா(மாதர் சங்கம்), ஆர்.பாரதி (மாணவர் சங்கம்),  சிஐடியு தலைவர்கள் ஜி. வெங்கடேசன்,  சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.