districts

ராயபுரம் மார்க்கெட்டில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும்

சென்னை, ஜன. 24 - ராயபுரம் மார்க்கெட் பேருந்து  நிறுத்தத்தின் இரு மார்க்கத்தி லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என்று மாநகர  போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ராயபுரம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எஸ்.கோவில் சாலை யில் உள்ள ராயபுரம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து  சாதாரண கட்டண பேருந்துக ளுக்கும் நின்று செல்லும். இனி அவ்வழியே இயக்கப்படும் அனைத்து சாதாரண, விரைவு  மற்றும் சொகுசு தட பேருந்துக ளும் (தடம் எண்-1, 1பி, 1சி, 1டி, 101, 109 டி) இரு மார்க்கத்தில் நின்று செல்லும். இதை தண்டை யார்பேட்டை மண்டல மேலாளர், போக்குவரத்து மேற்பார் வையாளர்கள் பேருந்துகள் நின்று செல்வதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு மேலாண்மை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார் .