districts

img

விவசாய ஐக்கிய முன்னணியினர் பாகூர் தொகுதியில் பிரச்சாரம்

புதுச்சேரி, ஏப்.18- புதுச்சேரி மக்களவைத் தொகுதி  வேட்பாளர் வைத் திலிங்கத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி விவசாய ஐக்கிய முன்னணி சார்பில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. பாகூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பத்மநாபன்,செயலாளர் சங்கர்,நிர்வாகி சரவணன், திமுக விவசாய அணி தலைவர்கள் பாஸ்கரன், தவமுருகன், குமரன், முத்து,  புதுச்சேரி விவசாய சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், கலியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். முன்னதாக  பாகூர், காட்டுக்குப்பம், கோரவள்ளிமேடு, பரிக் கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், குருவிநத்தம், சோரி யாங்குப்பம், இருளன் சந்தை ஆகிய கிராமங் களில் பிரச்சாரம் நடை பெற்றது.