districts

img

போனஸ் உச்சவரம்பை ரத்து செய்க...

போனஸ் உச்சவரம்பை ரத்து செய்து உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், உற்பத்தி திறனுக்கேற்ப போனஸ் நாட்களை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எக்ஸ்ட்ரா டிவிஷன் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் வி.ஹரிலால், மத்திய சங்க துணைத் தலைவர் பேபி ஷகிலா, துணை பொதுச் செயலாளர் அருண்குமார் செழியன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.