districts

3500 பணியிடங்களுக்கு ஆபத்து மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடுக!

மதுரை,மே 6- மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவால் 3500 சாலைப் பணியாளர், சாலை ஆய்வாளர் பணி யிடங்கள் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 4 சனிக்கிழ மையன்று மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது.  இதில்  மாநிலத் தலைவர் மா. பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ், மதுரை மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கோரிக்கைகள்

தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப் படும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டால்  3500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும் மாநில நெடுஞ்சாலை ஆணையம் என்பது தேசிய நெடுஞ்சா லை ஆணையத்தை போன்று செயல் படும் என்று பொதுப்பணி கட்டிடங்கள் நெடுஞ்சாலை- சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒரு கிலோமீட்டர் சாலையை அமைப்பதற்கு ரூ.18 கோடி செலவு மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.250 கோடி அளவிற்கு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய மோசடியும் நடந்துள்ளது. இதுபோன்று ஏராளமான முன்னுதாரணங்களை குறிப்பிட்டு சொல்லும் அளவு முறைகேடு நடப்பதற்கு  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழி வகுக்கக்கூடிய வகை யில் அமைந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சுங்கச்சாவடியை தமிழக அரசே நிர்வகித்திடுக!  சுங்கச்சாவடி அமைக்கும் நடைமுறைகளில் தமிழக அரசே நிர்வகிக்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் .அவ்வாறு திரட்டப்படும் சுங்கவரி மூலமாக அரசின் நிதி நிலைமையை மேம்படுத்தவும் முடியும். மக்களுக்கான அடிப்படை சேவை பணிகளை முன்னெடுப்பதற்கு அந்நிதியை பயன்படுத்திடவும் சாலை கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற அடிப்படை நியதியை தமிழக அரசு  உணர்ந்து, தனியார் லாபம் அடையத் தக்க வகையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சாலைகளை அமைத்து பராமரித்து சுங்கச்சாவடி அமைக்க அனுமதிக்க கூடாது. மேலும் அவ்வாறு அரசால் அமைக்கப்படும் சுங்கச்சாவடி மற்றும் பல்வேறு நிலைகளில் புதிதாக கிராமப்புற இளை ஞர்களை கொண்டு பணி வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.  

சீரமைப்பு நடவடிக்கைகளை கைவிடுக!

நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்கள், சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த பணியிடங்களை  கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து எதிர்வரும் காலத்தில் நிரந்தர பணியாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் காலமுறை ஊதிய முறையில் ஆள் எடுக்கக்கூடிய நடைமுறையை கை விடும் வகையிலும் நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு பணிகள் முன் னெடுப்பதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அறியவரு கிறோம்.  மேற்சொன்ன சீரமைப்பு கொள்கை யின் காரணமாக நெடுஞ்சாலைத்துறை நிரந்தர ஊழியர்கள் இல்லாத  நிலைமை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக நெடுஞ்சாலை துறையில் பணியிடங்கள் ஒவ்வொன்றாக குறைகிற பொழுது பணியிடங்களை நிரப்பாமல்  ஒப்பந்த நடைமுறையில் அவுட்சோர்சிங் முறையில் ,தொகுப்பூதிய முறையில், தனியார் ஏஜென்சிகள் மூலமாக அப் பணியிடங்களை முன்னெடுக்கக்கூடிய நிலைமை உள்ளது. மேலும் துறை யில் 60 வருடம் பணி முடித்து ஓய்வு பெறக் கூடிய ஊழியர்களை மீண்டும் அப்பணி யிடங்களில் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும்  நிலைமையும் உருவாகும் என்ற சூழல் நிலவி வருகிறது.  மேற்சொன்னவற்றை தமிழக  அரசு கருத்தில் கொண்டு தற்போது  உள்ள நெடுஞ்சாலை துறை கட்ட மைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு சாலைப் பணியாளர் களின் 41-மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். திண்டுக்கல்லில் வெள்ளிவிழா மாநாடு ஜூன் 10ஆம் தேதி அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  ஜூன் 19 ஆம் தேதி அனைத்து கண்காணிப்பு பொறியாளர் அலு வலகங்கள் முன்பு தண்டோரா முழக்கப் போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 25 வது சங்க உதய தினம் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு வெள்ளி விழா ஆண்டு சிறப்பு மாநாட்டை திண்டுக்கல்லில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

;