செங்கல்பட்டு, ஏப். 22- குப்பை கொட்டும் இடமாக மாறிவரும் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு நகரத்திலிருந்து திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் சாலை யில் ரயில்வே இருப்பு பாதை கடந்து செல்வதால் இராட்டிணங்கிணறு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி தற்போது நிறை வடைந்துள்ளது. போக்குவரத்து அனு மதிக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் அருகில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கு படிக்கட்டு கள் அமைக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி யில் செயல்பட்டுவந்த பழைய சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் முடித்து விட்ட நிலையில் இருப்பு பாதையின் இருபுறமும் மாநில அரசு சாலை அமைக்காததால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 2 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கரி டம் கேட்டபோது,
ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன்னர் இருந்த சாலை பகுதி யில் ரயில்வே துறை மூலம் அமைக்கப் பட்டுள்ள சுரங்கப்பாதையை மாநில அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. இந்த சாலையையும் சுரங்கப் பாதையையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் கொல்லமேடு, அம்மனப்பாக்கம், இளந்தோப்பு, குண்ணவாக்கம், ஈச்சங்கரணை ஈதேனுர், அஞ்சூர், தேன்மேல்பாக்கம் வல்லம், மேலமையூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொது மக்களும் திருக்கழுக்குன்றம், திருப்போருர், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனத் தில் வருபவர்கள் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தாமல் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியும் இதனால் அப்பகுதி யில் போக்குவரத்து மற்றும் விபத்துக்கள் தவிர்க்க முடியும். இந்த பணி ஏன் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது என பொது மக்கள் கேட்கிறார்கள். இந்நிலையில் அரசு நேரடி கவனம் செலுத்தி இருபுறமும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தி ரயில்வே சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.