விழுப்புரம், ஜூலை.13- விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஓன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. முதலமைச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.