districts

img

ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்

ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், இலவச மருத்துவம் அல்லது இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு  அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரட்சகர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆண்ட குருநாதன், கோபால், மணி,  மாவட்ட செயலாளர் மணி  உள்ளிட்ட பலர் பேசினர்.