districts

img

ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக மருத்துவரை நியமிக்க வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் உள்ள ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக மருத்துவரை நியமிக்க வேண்டும், திருவீதி அம்மன் கோவில் அருகே பழுதடைந்துள்ள கழிப்பறையை இழுத்து விட்டு புதிய கழிப்பறை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலத் தலைவர் தனியரசிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, துணைச் செயலாளர் செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் கஸ்தூரி, பொருளாளர் பாக்கியம், நிர்வாகிகள் புஷ்பா, அலமேலு, சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.