சென்னை, நவ. 4 - வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப் பட்டுள்ள விவகாரத்தில், அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அமைந்தகரை மேத்தா நகர், அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பணி களுக்காக 16வயது சிறுமி அழைத்து வரப்பட் டுள்ளார். வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களால் சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு அக்.31ந் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலுக்கு சிபிஎம் கடும் கண்டனத்தை தெரி விக்கிறது. சிறுமி கொலைக்கு காரணமான 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டியலின சமூகத்தை சார்ந்த (எஸ்சி) சிறுமியை சட்ட விரோதமாக வீட்டு வேலை உள்ளிட்ட பணி களில் அக்குடும்பத்தினர் ஈடுபடுத்தி உள்ள னர். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என சொல்ல ப்பட்டு வருகிற நிலையில், இந்த கொடூரமும், அவலமும் வெளியாகியுள்ளது. போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குழந்தையின் மரணம் உரிய முறையில் காவல்துறையால் கையாளப்படவில்லை. இறந்த சிறுமியின் படம் ஊடகங்களில் வெளி யிடப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊரில் உற வினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு கள் நடத்தாமல், காவல்துறையினர் முன்னி லையில் சென்னையிலேயே சிறுமியின் உடலை எரித்ததாக (தகனம்) தெரிகிறது. சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உருவாவதால் வன்கொடுமை சட்டத்தின்படி, உரிய விசாரணை அதிகாரி நியமித்து விசாரணையை அரசு மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு இழப்பீடும், அரசு வேலையும், குடி யிருக்க வீடும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நலத் திட்டங்களில் முன்னேறி உள்ள தமிழகத்தில் வயிற்றுப் பிழைப்புக் காக சிறுமியை வீட்டு வேலைகளில் ஈடு படுத்தக் கூடிய அவலம் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. எனவே, இப்பிரச் சனையை ஒரு தனிப்பட்ட சம்பவமாக கருதா மல் உரிய வகையில் விரிவான ஆய்விற்கும், விசாரணைக்கும் அரசு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. பணிப்பெண் கொலை: திடுக்கிடும் வாக்குமூலம் இதற்கிடையே சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருந்த தால் போலீஸார் நவாஸ்- நாசியா தம்பதியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசா ரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கணவன்- மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. தீபாவளி அன்று காலை நவாஸ், நாசியா, அவர்களுடைய நண்பர் லோகேஷ் ஆகியோர்சிறுமியை கொடூரமாக தாக்கி அவரது மார்பில் இஸ்திரிபெட்டியால் சூடு வைத்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்தாராம். இதனால் மூவரும் அந்த சிறுமியை குளியலறைக்குள் இழுத்து போட்டுவிட்டுவீட்டை பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டனர். விசாரணையில் லோகேஷ்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி கொலை குறித்து நாசியா கூறுகையில், கருப் பாக இருந்தாலும் அந்த சிறுமி அழகாக இருந்தார். இதனால் எனது கணவரின் பார்வை அவர் மீது திரும்பியதாக சந்தேகப் பட்டு கொடூரமாக சித்திரவதை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீஸார் எழும்பூர் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 16 ஆம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தற்போது அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.