சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரக் இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு வில்லியனூர்-நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மணிபாலன், இன்னரசு, செங்குலத்தான், தியாகராஜன் ஆகியோர் பேசினர். மங்கலம்,ஏம்பலம், அரியூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.