districts

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 77.54 விழுக்காடு சென்னை பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, ஜூன் 27 - பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம்  வகுப்பு அரசு பொதுத்தேர் வில் 77.54 விழுக்காடு மாணவ ர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சியின் கீழ்  32 மேல்நிலைப் பள்ளிகள்   செயல்பட்டு வருகின்றன.  2021-2022ஆம் கல்வியாண் டில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3,166 மாணவர்களு, 3,507 மாணவிகளும் என  மொத்தம் 6,673 பேர் தேர்வு  எழுதினர். இதில், 2,070 மாணவர்கள், 3,104 மாண விகள் என மொத்தம் 5,174 பேர் (77.54 விழுக்காடு) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் வணிகவியல் 1, கணக்கு பதிவியல் 5, கணினி  பயன்பாடுகள் 3 என 9 மாணவர்கள் 100/100 மதிப் பெண்களை பெற்றுள்ளனர்.  மதிப்பெண்கள் அடிப் படையில் 14 மாணவர்கள் 551க்கு மேல் பெற்றுள்ளனர். 501 லிருந்து 550 வரை 69  மாணவர்களும், 451லிருந்து 500 வரை 175 பேரும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95.41 விழுக்காடு, நுங்கம்பாக்கம் சென்னை  பெண்கள் மேல்நிலைப் பள்ளி  94.50 விழுக்காடு, மார்க்கெட் தெரு சென்னை  பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.81 விழுக்காடு என அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.