சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 76ஆவது நினைவு தினத்தை யொட்டி கடலூர் சிஐடியு அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர்கள் ஏ.பாபு, வி.அனந்தநாராயணன், வி.சுப்புராயன், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் வீ.திருமுருகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாக்கிரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.