districts

img

கடல்நீரை குடிநீராக்கும் 4ஆவது ஆலை: கட்டுமானப் பணிகள் ஜனவரியில் தொடக்கம்

சென்னை, செப்.27- சென்னையில் ஏற்க னவே கடல்நீரை குடி நீராக்கும் 2 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இதற்கிடையே நெம்மேலி யில் 10.5 ஏக்கர் பரப்பள வில் தினசரி 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலையின் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. கடலுக்குள் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு 2,250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் பதிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த குழாய் கடலுக்குள் 10 மீட்டர் ஆழம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. 47.35 கி.மீ தூரத்தில் 41 கி.மீ தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை குடிநீர் வாரியம் முடித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பேருக்கு சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் விநி யோகிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஆலை பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடி வடைந்து குடிநீர் விநி யோகம் தொடங்க உள்ளது. இந்நிலையில் நெம்மேலி அருகே உள்ள பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 4ஆவது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெம்மேலியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலை அமைகிறது. இந்த ஆலையின் கட்டு மான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 400 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். 200 மில்லியன் லிட்டர் குடி நீர் உற்பத்தி செய்யும் வகை யில் 2 பிரிவாக இந்த ஆலை அமைக்கப்படுகிறது. பரா மரிப்பு காலத்தில் கூட இந்த ஆலையில் இருந்து குறைந்தபட்சம் 200 மில்லியன் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.

;