districts

கிருஷ்ணகிரி டாடா நிறுவனத்தில் 40,500 பேருக்கு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி,ஜன .7- சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காணொலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.   மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழ கன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தொழில் அதிபர்கள்,தொழில் முனைவோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். ஓசூரில் உள்ள டாட்டா நிறுவனம், நாக மங்கலம் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை ரூ. 12,082 கோடிக்கு விரி வாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 40,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.