சீனாவை எதிர்க்க ரஷ்யாவுடன் இணக்கம் காட்டத் திட்டம்! கிஸ்ஸிங்கர் திட்டத்தை மீண்டும் பின்பற்றும் அமெரிக்கா
சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்வதற்காக ரஷ்யாவுடன் இணக்கத்தை உருவாக்கும் வகையில் உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தையை அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இதற்காக அமெரிக்கா ஹென்றி கிஸ்ஸிங்கர் திட்டத்தை மீண்டும் பின்பற்றுவதாக பேராசிரி யர் விஜய் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்பின் முடிவுகள் அவரது தனிப்பட்ட முடிவுகளை போல காட்டப்படுகின்றது. இது தவறான பார்வை. உண்மையில் கிஸ்ஸிங்கர் முன்வைத்த அமெரிக்காவின் நலன் என்ற அடிப்ப டையில் இருந்து தான் அவரது அறிவிப்புகள் அமைந்துள்ளன எனவும் கூறுகின்றார். சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும்அவர்களின் புதிய உற்பத்தி சக்தியின் வேகமான வளர்ச்சி உலகப் பொருளா தாரத்தின் முக்கியத் துறைகளில் அமெரிக்கா வின் ஆதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற் படுத்தியுள்ளது. மேலும் ரஷ்ய - சீன கூட்டணியால் உலக அரசியலில் தனது ஆதிக்கத்தின் பிடி நழுவி விடாமல் இருப்பதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் அமைதியான உறவுகளை கடைப்பிடிப்பதற்கான திட்டத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது. ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, கிஸ்ஸிங்கர் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய வடிவமைப்பை மேற் கொண்டார். குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் சீன மக்கள் குடியரசு (PRC) ஆகிய வற்றுக்கு இடையே ஏற்பட்ட எல்லைப்பிரச்ச னையை உன்னிப்பாக கவனித்து, அதை வைத்து இருநாடுகளும் இணையாமல் பார்த்துக்கொண்டார். தொழில் நுட்பம் வளர்ந்து வந்த அக்கா லத்தில் இருநாடுகளும் கூட்டணி அமைத்தால் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு மற்றும் உலக அரசியலில் அமெரிக்கா செலுத்தி வந்த ஆதிக்கத்தை உடைத்து விடும் என கிஸ்ஸிங்கர் எச்சரித்துள்ளார். இதற்காக கிஸ்ஸிங்கர் சீனா வுடன் அமெரிக்கா நல்லுறவை அதிகரிக்க திட்டம் வகுத்துக்கொடுத்தார். நெருங்குவ தற்காக 1970 இல் பாகிஸ்தான் மூலம் கிஸ்ஸி ங்கர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின் நிக்சன் 1971 இல் சீனா சென்றார். சீனப் பயணத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு கிஸ்ஸிங்கர் கொடுத்த ரகசியமான வாய்மொழி உத்தரவில், ‘சீனர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்கள் நம்மை முழுமையாக விரும்பவில்லை. ஆனால் நமது நாட்டின் சூழ்நிலை, சோவியத் வளர்ச்சி, தென் கிழக்கு ஆசியாவின் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சீனர்களுடனான உறவு நமக்கு தேவையாக உள்ளது என தெரிவித்திருந்தார். சோவியத் ஒன்றியம் சரிவை சந்தித்தப் பிறகும் நீண்ட காலத்திற்கு சீனாவுடன் அமெ ரிக்கா நட்புக் கொள்ள வேண்டும்.
ரஷ்யாவைத் தனிமைப்படுத்த வேண்டும். ஐரோப்பாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர வேண்டும் என கிஸ்ஸிங்கர் தொடர்ந்து வாதிட்டு வந்தார். 1990-களுக்கு பிறகு ரஷ்யா அமெரிக்கா வுடன் இணக்கமாகப் போனது. குறிப்பாக 1998 இல் ஜி-7 கூட்டணியில் இணைந்தது. அதன் பிறகு 2007 இல் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் புடின் ஜி-7 இல் இருந்து வெளியேறினார். டிரம்ப் முதல் முறையாக ஜனாதிபதியாக இருந்த போது 2018இல் ரஷ்யாவுடன் இணக் கத்தை ஏற்படுத்த கிஸ்ஸிங்கர் வலியுறுத்தினார். அதனடிப்படையில் டிரம்ப் சீனாவைத் தனிமைப் படுத்தவும், ரஷ்யாவுடன் நட்பை மேற்கொள்ள வும் முயன்றார். ஆனால் அத்திட்டம் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிஸ்ஸிங்கரின் வெளியுறவுக்கொள்கை முற்போக்கானதல்ல. அது உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்ற ஆபத்தான திட்டத்தின் வெளிப்பாடாகும்.
மக்ரோன் மற்றும் ஸ்டார்மரை விமர்சிக்கும் டிரம்ப்
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர “எதுவும் செய்யவில்லை” என்று டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைனுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஸ்டார்மர், மக்ரோன் ஆகிய இருவரும் டிரம்ப்பை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலிப்படையினரை கட்டுப்படுத்தும் இலங்கை
இலங்கையில் 58 கூலிப்படை கும்பல்களையும் அக்கும்பலைச் சேர்ந்த சுமார் 1,400 குண்டர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை காவல் துறை அறிவித்துள்ளது. 2025 இல் இதுவரை இக்கும்பல்க ளால் 22 பேர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள் ளனர் என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்கொலையில் தொடர்புடைய ராணுவம் மற்றும் காவல் துறையை சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் அபாய கட்டத்தை கடக்கவில்லை
நுரையீரலின் இரண்டுபுறமும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ள போப் பிரான்சிஸ் இன்னும் அபாயக் கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. அதே நேரம், அவர் மரணத்தின் விளிம்பிலும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ள னர். உடல் நலக் குறைவு காரணமாக அவர் 8 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் அவருக்கு 1 வாரம் மருத்துவர்கள் கவனிப்பு தேவைப்படுகின்றது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.