சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதால், மாநிலங்களுக்கு கல்வி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அதனால் கல்வி விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா
பெற்றோர்கள் தங்கள் மகன்களை விட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகள்-மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளைப் பள்ளிப் பாடத்திட்டத்திலும் கொண்டுவர வேண்டும்.
பஞ்சாப் எதிர்கட்சித் தலைவர் பிரதாப் சிங்
பஞ்சாப்பில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு துறையே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த துறையில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நான் இதுவரை கண்டிராத சம்பவம் இது. பஞ்சாப் மக்களை பகவந்த் மான் மற்றும் கெஜ்ரிவால் ஏமாற்றிவிட்டார்கள்.
தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம்
உயர்கல்விக்கான செலவுகளை மாநில அரசுகள் ஏற்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநிலங்க ளுக்கு உள்ள அதிகாரத்தை ஏன் பறிக்க வேண்டும்? ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த அரசியலமைப்பு நெருக்கடியை யுஜிசி-யின் புதிய விதிகள் உருவாக்கி உள்ளன. யுஜிசி வரைவு அறிக்கையில் உள்ள கூட்டாட்சிக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும்.