கோடி கடனில் தத்தளிக்கும் குஜராத் மாடல்
பாஜக ஆளும் குஜராத் மாநிலம் கடனில் தத்தளித்து வருவ தாகஅம்மாநில அரசு சட்ட மன்றத்திலேயே ஒப்புக்கொண்டுள் ளது. இதுதொடர்பாக குஜராத் மாநில சட்ட மன்றத்தில் எழுப்பப் பட்ட கேள்விக்கு அரசு அளித்்துள்ள பதிலில்,”கடந்த 2 நிதி யாண்டுகளில் நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.10,463 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது. தற் போதைய சூழ்நிலையில்குஜராத் மாநிலத்தின் மொத்த கடன் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது குஜராத் மாநிலத்தில் 6 கோடிக்கும் அதிகமான அளவில் மக்கள் தொகை உள்ளது. மக்கள் தொகை 6 கோடியாகக் கருதினால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத் மக்களின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூப ணமாகியுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.