districts

img

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை, ஏப்.23- சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்ததன்அடிப்படையில்  அதிகாரிகள், அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று அதிகாலை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.