districts

img

மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் பலி

அம்பத்தூர், செப்.15- செங்குன்றம் அடுத்த வடகரை பகுதியில் ஏராள மானோர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.வழக்கம் போல் பசுக்களை மேய்ச்சலுக் காக அவிழ்த்து விட்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 4 பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி உயி ரிழந்தன. இதுகுறித்து  செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். முறையான சீரமைப்பு பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளாததே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.