districts

img

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்  3ஆவது முறை தீவிபத்து

சென்னை, ஜூன் 2- சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்  உள்ள டி’  ப்ளாக்கில்  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. அண்ணா நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 606 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று அதிகாலை 4 மணி அளவில்  டி’ பிளாக்கில்  மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீவிபத்தை ஜேஜே நகர் மற்றும் கோயம்பேடு தீ அணைப்பு துறையினர்  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் உயிர் சேதம்  தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் இடம் பேசிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள், 3ஆவது முறையாக இது போன்ற மின் கசிவு கரணமாக தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்  இடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். முதல் கட்ட விசாரணையில் தரமான ஒயர்கள் போடப்படாததால் இது போன்ற விபத்துகள்  அடிக்கடி நிகழ்வதாகவும் 15 மாடி கட்டிடத் தளத்தில் குடிநீர்  வசதி முறையாக இல்லை எனவும், மின் தூக்கி பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் தீ விபத்து நேரத்தில் தீயை அணைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்று குடிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.